Thursday, 22 September 2011

அன்னதானம்

நமது சொந்த ஊரில் தினமும் 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் (ஒரு வேளை நாம்) செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ,அதே அளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளன்று அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.



காசியில் தங்கி ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.



துவாதசி திதியன்று திரு அண்ணாமலையில் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால்,காசியில் நாம்,நமது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்தளவுக்குப் புண்ணியம் கிடைத்துவிடும்.அதுபோக,நமக்கு மறுபிறவியில்லாத முக்தியும் கிடைத்துவிடும் என்று சிவமகாபுராணம் தெரிவிக்கிறது.

24.9.2011 அன்று சனிக்கிழமையன்று துவாதசி திதி வருகிறது

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment